மாநிலங்களவைச் செயலகம்
azadi ka amrit mahotsav

தான்சானியாவில் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான 153-வது மாநாடு இந்தியக் குழுவுக்கு மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமை வகிக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 03 OCT 2026 12:56PM by PIB Chennai

தான்சானியா நாட்டின் அருஷா நகரில் அக்டோபர் 5 முதல் 9 வரை நடைபெறவுள்ள 153-வது நாடாளுமன்றங்களுக்கு இடையேயான யூனியனான (ஐபியூ) மாநாட்டிலும், அதனுடன் தொடர்புடைய கூட்டங்களிலும் பங்கேற்பதற்காக, மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு தன்சானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்த மாநாட்டில், உலகெங்கிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். "அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, நம்பிக்கை, அனைவருக்கும் வாய்ப்புகள் ஆகியவை மூலம் சிறந்த நிர்வாகத்தை மேம்படுத்தி, சமூகங்களை வலுப்படுத்துதல்" என்ற கருப்பொருளின் அடிப்படையில் இதில் விவாதங்கள் நடைபெளவுள்ளன.

இந்திய நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள்:

* திரு ஹரிவன்ஷ் - மாநிலங்களவை துணைத் தலைவர் (குழுத் தலைவர்)

* திரு அனுராக் சிங் தாகூர் - மக்களவை உறுப்பினர்

* திருமதி் அபராஜிதா சாரங்கி - மக்களவை உறுப்பினர்

* டாக்டர் சஸ்மித் பத்ரா - மாநிலங்களவை உறுப்பினர்

* டாக்டர் சஞ்சய் ஜெய்சவால் - மக்களவை உறுப்பினர்

* திருமதி கமல்ஜீத் செஹராவத் - மக்களவை உறுப்பினர்

* டாக்டர். லதா வான்கடே - மக்களவை உறுப்பினர்

* திருமதி பிஜுலி கலிதா மேதி - மக்களவை உறுப்பினர்

* திரு என். கே. பிரேமச்சந்திரன் - மக்களவை உறுப்பினர்

மாநாட்டின் சிறப்பம்சங்கள்:

இக்குழுவினர் தற்கால உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விவாதங்களில் பங்கேற்று, இந்தியாவின் நிலைப்பாடுகளை எடுத்துரைப்பார்கள்.

இந்த மாநாட்டில் இந்தியாவின் பங்கேற்ப்பானது, ஐபியு அமைப்புடன் இந்தியா தொடர் தொடர்பில் இருப்பதையும், உலகளாவிய அமைதி, வளர்ச்சி, ஜனநாயகம், சமூக மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் உறுதியான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2318590&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2318630) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Telugu