பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காந்தி ஸ்மிருதியில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 02 OCT 2026 8:54PM by PIB Chennai

காந்தி ஸ்மிருதியில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று, மகாத்மா காந்தியின் காலத்தால் அழியாத பொன்மொழியை நினைவுகூர்ந்தார்.

இளம் நண்பர்களுடன் தான் மேற்கொண்ட கலந்துரையாடல், இந்த நிகழ்வின் ஒரு முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

சமூக ஊடக  எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டதாவது:

“காந்தி ஸ்மிருதியில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். அப்போது மகாத்மாவின் காலத்தால் அழியாத பொன்மொழியை நாங்கள் நினைவுகூர்ந்தோம்.

எனது இளம் நண்பர்களுடனான கலந்துரையாடல், இதில் ஒரு முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது.”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2318459&reg=3&lang=1

***

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2318574) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Gujarati