பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 75 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைனுக்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 02 OCT 2026 6:05PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் 75 கிலோ குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைனுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

லவ்லினாவின் விளையாட்டுப் பயணம் அபாரமான உறுதியையும் சிறப்பையும் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் கூறியிள்ளார்.

 

லவ்லினா போர்கோஹைனின் எதிர்கால முயற்சிகளுக்குத் தமது நல்வாழ்த்துகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

"லவ்லினா போர்கோஹைனிடமிருந்து ஒரு மிகச் சிறந்த செயல்திறன் வெளிப்பட்டுள்ளது!

 

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் 75 கிலோ குத்துச்சண்டை பிரிவில், இறுதிப் போட்டியில் 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று தங்கம் வென்ற லவ்லினாவுக்கு வாழ்த்துகள். அவரது விளையாட்டுப் பயணம், குறிப்பிடத்தக்க உறுதியையும் சிறப்பையும் பிரதிபலிக்கிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திரமோடி”

 

(Release ID: 2318262)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2318293) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Gujarati , Telugu , Malayalam