பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ரிகர்வ் வில்வித்தை கலப்புக் குழுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தீரஜ் பொம்மதேவரா, குங்கும் அனில் மொஹோத் ஆகியோருக்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 02 OCT 2026 1:22PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ரிகர்வ் வில்வித்தை கலப்புக் குழுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தீரஜ் பொம்மதேவரா, குங்கும் அனில் மொஹோத் ஆகியோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

அவர்கள் அபாரமான திறமையையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தப் பிரிவில் இந்தியாவிற்கு முதல் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளதாகப் பிரதமர் கூறியுள்ளார்.

 

இந்த மறக்க முடியாத சாதனைக்காக இரு வில்வித்தை வீரர்களையும் வாழ்த்துவதாகக் கூறியுள்ள திரு நரேந்திர மோடி, அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்குத் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

ஒரு அற்புதமான வெள்ளிப் பதக்கம்!

 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ரிகர்வ் வில்வித்தை கலப்புக் குழுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தீரஜ் பொம்மதேவரா, குங்கும் அனில் மொஹோத் ஆகியோரை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.

 

அவர்கள் அபாரமான திறமையையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தப் பிரிவில் நமது நாட்டிற்கு முதல் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளனர்.

 

இந்த மறக்க முடியாத சாதனைக்காக இந்த இரு வில் வித்தை வீரர்களுக்கும் வாழ்த்துகள். மேலும், அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் நல்வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திரமோடி”

 

(Release ID : 2318114)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2318155) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Gujarati , Kannada , Malayalam