பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஸ்கிஃப் பாய்மரப் படகுப் போட்டிப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹர்ஷிதா தோமர், ஷீதல் வர்மா ஆகியோருக்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 02 OCT 2026 1:18PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஸ்கிஃப் பாய்மரப் படகுப் போட்டிப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹர்ஷிதா தோமர், ஷீதல் வர்மா ஆகியோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

உறுதியுடனும் விடாமுயற்சியுடனும் இந்தியாவை வெற்றிப் பாதைக்குக் கொண்டு சென்றதோடு, முந்தைய செயல்திறனையும் அவர்கள் விஞ்சியிருப்பதாகப் பிரதமர் கூறியுள்ளார்.

 

 ஹர்ஷிதா தோமர், ஷீதல் வர்மா ஆகியோரின் எதிர்கால முயற்சிகளுக்குத் தமது நல்வாழ்த்துகளைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஸ்கிஃப் பாய்மரப் படகுப் போட்டிப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹர்ஷிதா தோமர், ஷீதல் வர்மா ஆகியோருக்கு வாழ்த்துகள்! தங்கள் உறுதியாலும் விடாமுயற்சியாலும், அவர்கள் இந்தியாவை பதக்க வாய்ப்புக்கு அழைத்துச் சென்றதுடன், முந்தைய செயல்திறனையும் அவர்கள் விஞ்சியுள்ளனர். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திரமோடி"

 

(Release ID: 2318112)

 

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2318143) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada , Malayalam