பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி கோபர்தன் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 OCT 2026 8:27PM by PIB Chennai
உயிரி எரிவாயுத் துறையை மேம்படுத்தும் கோபர்தன் என்ற மத்தியத் துறைத் திட்டத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி இன்று தொடங்கி வைத்தார்.
ரூ. 23,731 கோடி மதிப்பீட்டில் 2026 ஆகஸ்ட் 6 அன்று மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இத்திட்டம், இந்தியாவில் உயிரிஎரிவாயு உற்பத்தியை விரைவுபடுத்துவதற்காக 2026-27 முதல் 2035-36 வரையிலான பத்து ஆண்டு கால கட்டமைப்பை வழங்குகிறது. உள்நாட்டு உயிரிஎரிவாயு உற்பத்தியை ஏறக்குறைய 10 மடங்கு வரை அதிகரிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. துவக்க விழாவில், கோபர்தன் கையேடு வெளியிடப்பட்டதுடன், மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளமான ஒருங்கிணைந்த கோபர்தன் இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய திரு ஹர்தீப் சிங் பூரி, உள்நாட்டு எரிசக்தி வளங்களை மேலும் மேம்படுத்துவதன் மூலம், கிடைக்கும் தன்மை, கட்டுப்படியாகும் விலை, நிலைத்தன்மை ஆகிய ஒருங்கிணைந்த நோக்கங்களின் வழியாக இந்தியாவின் அதிகரித்து வரும் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறினார். இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு, கிராமப்புற வளம், 'கழிவிலிருந்து செல்வம்' என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லுமாறு தொழில்துறை, நிதி நிறுவனங்கள், மாநிலங்கள், கூட்டுறவு சங்கங்கள், தொழில்நுட்ப வழங்குநர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2317937®=3&lang=1
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2317996)
வருகையாளர் எண்ணிக்கை : 8