உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு இயக்கம் 6-ல் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சகம் தயாராகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2026 1:16PM by PIB Chennai

நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை ஏற்பாடு செய்துள்ள சிறப்பு இயக்கம் 6-ல் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சகம் தயாராகிறது.

இது 2026 செப்டம்பர் 15 முதல் 30 வரை முன்னேற்பாடு கட்டமாகவும், அக்டோபர் 2 முதல் 31 வரை செயல்படுத்தும் கட்டமாகவும் உள்ளது.

தூய்மைப் பணியை ஊக்குவித்தல், பணி நடைமுறைகளை சீரமைத்தல், நிலுவையில் உள்ள குறைகளுக்குத் தீர்வு காணுதல் ஆகியவை இதன் நோக்கமாகும்.

உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு இயக்கம் 6 மூலம் நீடித்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த பணிச்சூழலை உருவாக்குவதிலும், பல்வேறு வகையான கோரிக்கைகள், விவகாரங்கள் ஆகியவற்றில் நிலுவையில் உள்ள பணிகளைத் தீர்ப்பதிலும் கவனம் செலுத்தப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள், நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள், அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனைகள், பொதுமக்கள் குறைகள், மேல்முறையீடுகள் ஆகியவை இதில் அடங்கும். அத்துடன் ஆவண மேலாண்மை முறையை மேம்படுத்துவதும் இதில் இடம்பெறும்.

சிறப்பு இயக்கம் 6-ஐ செயல்படுத்துவது அமைச்சகத்தின் உயர்மட்ட நிலையில் கண்காணிக்கப்படுகிறது. இந்த இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்து மத்திய ஆயுத காவல்படையினர், மத்திய காவல் அமைப்புகள் ஆகியவற்றிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313801&reg=3&lang=1

***

TV/IR/SM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2317987) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada