தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் தில்லியில் பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் தூய்மைப் பணிகள்

இடுகை இடப்பட்ட நாள்: 01 OCT 2026 4:39PM by PIB Chennai

'தூய்மையே சேவை 2026' இயக்கத்தின் ஒரு பகுதியாக , புதுதில்லியில் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தலைமையகத்தில் உள்ள தேசிய ஊடக மையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

 

தாயின் பெயரில் மரக்கன்று நடும் இயக்கத்தின் கீழ், நேற்று (2026 செப்டம்பர் 30) மரக் கன்று நடும் இயக்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

 

இன்று, (2026 அக்டோபர் ), 'ஒரு நாள், ஒரு மணி நேரம் என்ற முன்முயற்சியின் கீழ் ஒரு தூய்மை இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இயக்கம், வளாகத்தின் தூய்மையிலும் பராமரிப்பிலும் கவனம் செலுத்தியது.

 

இன்று தேசிய ஊடக மையத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான பாராட்டு விழா ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பணியிடங்களில் தூய்மையையும் சுகாதாரத்தையும் பேணுவதில் அவர்களின் அர்ப்பணிப்புமிக்க முயற்சிகளையும் மதிப்புமிக்க பங்களிப்புகளையும் இந்த விழா அங்கீகரித்தது.

 

 அதிகாரிகள், அலுவலர்களின் பங்கேற்புடன் இந்த நடவடிக்கைகளை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநர் வழிநடத்தினார். இந்த தொடர் நடவடிக்கைகள், தூய்மையே சேவை இயக்கத்தில் கூட்டுப் பங்கேற்பை மேம்படுத்துவதற்கு பத்திரிகை தகவல் அலுவலகம் கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன.

 

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2317673&reg=3&lang=1

(Release ID: 2317673)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2317953) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Kannada , Malayalam