தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஐஐஎம்சி-யில் தூய்மையே சேவை இயக்கம் : மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கேற்பு
தூய்மை நடவடிக்கைகளில் மாணவர்களும் அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும் – டாக்டர் எல் முருகன்
இடுகை இடப்பட்ட நாள்:
01 OCT 2026 4:09PM by PIB Chennai
மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், இன்று (01.10.2026) புதுதில்லியில் உள்ள இந்திய மக்கள் தொடர்பு நிறுவனமான ஐஐஎம்சி-யில் தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
தூய்மையை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கத்துடன் பிரதமர் திரு நரேந்திர மோடி 2014-ம் ஆண்டில் தூய்மை இந்தியா இயக்கத்தைத் தொடங்கி வைத்ததை நினைவு கூர்ந்தார். பொது இடங்கள் உட்பட, இயன்ற இடங்களில் எல்லாம் தூய்மை நடவடிக்கைகளில் மாணவர்களும் அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். நமது நாட்டையும், நிறுவனங்களையும், அலுவலகங்களையும் தூய்மையாக வைத்திருப்பது நமது கூட்டுப் பொறுப்பாகும் என்று அமைச்சர் கூறினார்.
நிறுவனத்தில் தூய்மை உறுதிமொழியுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இதில் பேராசிரியர்கள், அதிகாரிகள், பணியாளர்கள், மாணவர்கள், இந்திய தகவல் பணி பயிற்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஐஐஎம்சி வளாகத்தில் அன்னையின் பெயரில் மரக்கன்று நடும் இயக்கத்தின் கீழ் ஒரு மரக்கன்றை டாக்டர் எல். முருகன் நட்டார். அவர் மாணவர்களுடன் கலந்துரையாடி, மரம் நடுவது மட்டுமல்லாமல், அவற்றின் தொடர்ச்சியான பராமரிப்பையும் உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியின்போது, அமைச்சர் புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறைகள், விடுதி கட்டுமானப்பணி, புதுப்பிக்கப்பட்ட நூலகம் உள்ளிட்ட பிற கல்வி, உள்கட்டமைப்பு வசதிகளையும் பார்வையிட்டார். அவர் நிறுவனத்தின் பல்வேறு மாநிலங்கள், துறைகளைச் சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில், ஐஐஎம்சி-யின் துணைவேந்தர் பிரக்யா பாலிவால் கவுர், பதிவாளரும் பயிற்சி தலைமை இயக்குநருமான திரு எல். மது நாக், மூத்த பொருளாதார ஆலோசகர் திரு. ஆர்.கே. ஜெனா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2317637®=3&lang=1
----
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2317847)
வருகையாளர் எண்ணிக்கை : 8