ஆயுஷ்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் விரைவான வளர்ச்சிக் கண்டு வரும் துறைகளில் ஒன்றாக ஆயுஷ் உருவெடுத்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 30 SEP 2026 12:38PM by PIB Chennai

இந்தியாவில் விரைவான வளர்ச்சிக் கண்டும் வரும் சேவைத் துறைகளில் ஒன்றாக ஆயுஷ் உருவெடுத்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2024-25-ம் ஆண்டிற்கான ஆயுஷ் துறையின் பொருளாதார பங்களிப்பு 36.92 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த 2022-23 நிதியாண்டு முதல் 16.91 என்ற வருடாந்திர ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சுகாதாரம், நலவாழ்வு, வேலைவாய்ப்பு உருவாக்கம், மருத்துவச் சுற்றுலா ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆயுஷ்துறை தொடர்ந்து பங்களித்து வருவதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2047-ம் ஆண்டிற்குள் ஆயுஷ் துறையின் பொருளாதார மதிப்பு 216 முதல் 318 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப துறைசார்ந்த வளர்ச்சியின் வலிமையை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

நாக்பூரில் செப்டம்பர் 23-ம் தேதியன்று நடைபெற்ற 11-வது ஆயுர்வேத தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது, இந்த ஆய்வறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2316869&reg=3&lang=1

***

SS/SV/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2317259) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Gujarati