பிரதமர் அலுவலகம்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நூற்றாண்டு தினத்தைக் குறிக்கும் வகையில் நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையைப் பிரதமர் வெளியிடுகிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
30 SEP 2026 2:09PM by PIB Chennai
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) நூற்றாண்டு தின கொண்டாட்டத்தையொட்டி, புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை (1.10.2026) காலை 11:00 மணிக்கு நடைபெறும் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
1926-ம் ஆண்டு யுபிஎஸ்சி நிறுவப்பட்டு, நூறு ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி தொடங்கிய ஓராண்டுக் கால கொண்டாட்டங்களின் நிறைவாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் யுபிஎஸ்சி நூற்றாண்டு நினைவு நாணயம், நினைவு அஞ்சல் தலை, 100 முக்கியத் தீர்ப்புகள் – இந்தியாவில் யுபிஎஸ்சி, பொதுப் பணி ஆணையங்களின் கொள்கைகளை வடிவமைத்தல் என்ற புத்தகத்தையும் வெளியிடுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், மத்திய அரசின் உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள், யுபிஎஸ்சி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
செப்டம்பர் 30, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் யுபிஎஸ்சி நடத்தும் இரண்டு நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த விழா நடைபெறுகிறது. புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் முதல் நாளில் நூற்றாண்டு விழா - சிந்தனை அமர்வு நடைபெறுகிறது.
இதில் பிரபல பேச்சாளர்களின் உரைகளும், அதனைத் தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் குழு விவாதமும் இடம்பெறும்.
***
(Release ID: 2316911)
TV/SV/RJ/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2317174)
வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam