வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
பணியிடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மத்திய வர்த்தக அமைச்சகம் தொடங்கவுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
29 SEP 2026 3:22PM by PIB Chennai
பணியிடங்களில் தூய்மையை பராமரிப்பதற்கும் நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதற்கும் மத்திய அரசு முன்னுரிமை அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு இயக்கம் 6.0-ல் மத்திய வர்த்தக அமைச்சகம் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள உள்ளது.
இதில் பணியிடங்களில் தூய்மைப் பராமரிப்பு பணிகளை வழக்கமான நடைமுறையாக மேற்கொள்வதுடன் ஆவண மேலாண்மை திறமையான இடப்பயன்பாடு, மின்னணு கழிவுகளை அறிவியல் பூர்வமாக அகற்றுவது போன்ற நடவடிக்கைகளில் வர்த்தக அமைச்சகம் மற்றும் அது சார்ந்த அலுவலகங்களில் கவனம் செலுத்துகிறது.
இந்த தூய்மை இயக்கம் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டமாக செப்டம்பர் 15 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் முன்னேற்பாட்டு பணிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அரசுகள், அமைச்சகங்களுக்கு இடையேயான குறிப்புகள் மூன்று மாத காலத்திற்கும் மேலாக நிலுவையில் உள்ள விவகாரங்களுக்கு உடனடியாக தீர்வு காண்பதற்கான நடிவடிக்கைகள், ஆவணங்களை ஆய்வு செய்தல், கோப்புகளை பதிவு செய்தல், மின்னணு கோப்புகளை நிறைவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இதில் அடங்கும்.
இரண்டாவது கட்டமாக அக்டோபர் 2 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் தூய்மைப்பணிகளில் மின்னணு கழிவுகள் மற்றும் தேவையற்ற பொருட்களை அறிவியல் பூர்வமாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மூன்றாவது கட்டமாக நவம்பர் 16 முதல் 30-ம் தேதி வரை பல்வேறு அமைச்சகங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் செயல்திறன் குறித்த மதிப்பாய்வு நடவடிக்கைகள் இடம்பெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2316474®=3&lang=1
***
TV/SV/PS/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2316868)
வருகையாளர் எண்ணிக்கை : 9