பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 28 SEP 2026 12:19PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி 46-வது ஃபிடே செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர்களின் ஆர்வமும், உறுதிப்பாடும் முன்மாதிரியாகத் திகழ்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அவர்களது இந்த வெற்றி  மேலும் பல இளைஞர்களை செஸ் விளையாட்டின் மீது ஆர்வத்தை அதிகரிப்பதோடு, விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்குவதற்கு உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

“இந்திய செஸ் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகள்!  அவர்களது ஆர்வமும், மன உறுதியும் முன்மாதிரியாகத் திகழ்கின்றன.

இந்த வெற்றி மேலும் பல இளைஞர்களுக்கு செஸ் விளையாட்டின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துவதுடன் அதில் சிறந்து விளங்குவதற்கும் உத்வேகம் அளிக்கிறது.”

***

Release ID: 2315851

TV/SV/PS/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2316600) வருகையாளர் எண்ணிக்கை : 11