பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய குழுவினருக்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 26 SEP 2026 7:48PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் '3 பொசிஷன்ஸ்' அணிப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற திலோத்தமா சென், விதர்சா வினோத் கொச்சலும்கல், ஆஷி சௌக்ஸி ஆகியோரின் துல்லியமான செயல் திறனைப் பாராட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டதுடன், வருங்காலத்திலும் அவர்கள் மேலும் பல வெற்றிகளைத் தொடர்ந்து பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தையும்  பிரதமர் வெளிப்படுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

“திலோத்தமா சென், விதர்ஷா வினோத் கொச்சலும்கல், ஆஷி சௌக்ஸி ஆகியோரின் மிகச்சிறப்பான மற்றும் துல்லியமான செயல்பாடு!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் அணிப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவர்களுக்கு வாழ்த்துகள்.

எதிர்காலத்திலும் அவர்கள் மேலும் பல வெற்றிகளைக் குவிக்கட்டும்: பிரதமர் @narendramodi”

----

(Release ID 2315356)

TV/BR/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2316476) வருகையாளர் எண்ணிக்கை : 10