ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக திறன் மேம்பாட்டு போட்டியில் இந்தியா இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் சிறந்த செயல்பாட்டிற்கான பதக்கத்தையும் வென்று சாதனை

இடுகை இடப்பட்ட நாள்: 29 SEP 2026 12:11PM by PIB Chennai

உலக திறன் மேம்பாட்டு போட்டியில் இந்தியா இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் சிறப்பான செயல்பாட்டிற்கான பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது.  சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 48-வது உலக திறன் மேம்பாட்டு போட்டியில் தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது சிறப்பான திறனை வெளிப்படுத்தி இந்தப் பதக்கத்தை வென்றனர்.

ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம், டிஜிட்டல் ஊடக வடிவமைப்பு, சில்லறை விற்பனை உள்ளிட்ட முக்கிய ஆடை வடிவமைப்பு, ஆக்கப்பூர்வமான திறன் மேம்பாட்டு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் இந்தியா சார்பில் என்ஐஎஃப்டி மாணவர்கள் பங்கேற்றனர்.

2026 செப்படம்பர் 23 முதல் 26 வரை நடைபெற்ற இந்த போட்டியில் 68 நாடுகளைச் சேர்ந்த 1,400-க்கும் மேற்பட்ட இளம் போட்டியாளர்கள், 64 திறன் மேம்பாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் 70 போட்டியாளர்கள் அடங்கிய குழு 63 வகையான திறன் மேம்பாட்டு போட்டிகளில் பங்கேற்று 6 வெள்ளிப்பதக்கம், 20 சிறப்பு செயல்பாட்டிற்கான பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 10-வது இடத்தைப் பிடித்தது.  

இத்தகைய திறன் மேம்பாட்டு போட்டிகளில் பெற்ற வெற்றிகளின் மூலம் ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம், படைப்பாற்றல், சில்லறை வர்த்தகம், டிஜிட்டல் திறன்களை ஒன்றினைத்து சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதியுள்ள நபர்களை உருவாக்குவதில் இந்த நிறுவனம் தொடர்ச்சியான பங்களிப்பை அளித்து வருவதற்கு மத்திய ஜவுளி அமைச்சகம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2316376&reg=3&lang=1

***

SS/SV/PS/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2316465) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Khasi , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Manipuri