பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அபய் சிங்கிற்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 27 SEP 2026 8:24PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அபய் சிங்கிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.

அவரது திறமையும், மனஉறுதியும் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், இந்தச் சாதனை அவர் பல ஆண்டுகளாக மேற்கொண்ட கடின உழைப்பின் வெளிப்பாடு என்றும் கூறினார். மேலும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கும் தனது நல்வாழ்த்துகளை திரு மோடி தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அபய் சிங்கிற்கு @abhaysinghk98-க்கு வாழ்த்துகள்! அவரது திறமையும், மனவுறுதியும் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளன. இந்தச் சாதனை, பல ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட கடின உழைப்பைப் பிரதிபலிக்கிறது. அவரது எதிர்காலப் பயணத்திற்கு நல்வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi"

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315639&reg=3&lang=1   

***

TV/BR/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2316417) வருகையாளர் எண்ணிக்கை : 10