பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்குப் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
26 SEP 2026 7:53PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மனுஷ் ஷா, தியா சிதாலே ஆகியோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்தியாவில் டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்கு அதிகரித்து வரும் வரவேற்பிற்கு, இந்தப் பதக்கம் மேலும் ஒரு பெருமைமிக்க தருணத்தைச் சேர்த்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், வீரர்களின் எதிர்கால செயல்பாடுகளுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர்களின் மனஉறுதி, பல இளம் வீரர்கள் இந்த விளையாட்டைத் தேர்ந்தெடுக்கவும், உயர்ந்த இலக்குகளை அடையவும் ஊக்கமளிக்கும் என்று திரு மோடி குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மனுஷ் ஷா, தியா சிதாலே ஆகியோருக்கு வாழ்த்துகள்.
இந்தியாவில் டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்கு அதிகரித்து வரும் வரவேற்பிற்கு, இந்தப் பதக்கம் மேலும் ஒரு பெருமைமிக்க தருணத்தைச் சேர்த்துள்ளது. அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.
வீரர்களின் மனஉறுதி, பல இளம் வீரர்கள் இந்த விளையாட்டைத் தேர்ந்தெடுக்கவும், உயர்ந்த இலக்குகளை அடையவும் அவர்களை ஊக்கமளிக்கும்: பிரதமர் @narendramodi"
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315359®=3&lang=1
***
TV/BR/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2316382)
வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam