பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிருக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற பருல் சவுத்ரிக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 28 SEP 2026 9:15PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டி பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற பருல் சவுத்ரிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.

அவரது வெற்றி, வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். அவரது எதிர்கால முயற்சிகளுக்குத் தனது நல்வாழ்த்துகளையும் திரு மோடி தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற பருல் சவுத்ரிக்கு வாழ்த்துகள். அவரது வெற்றி, வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த ஊக்கமளிகக்கும் வகையில் அமைந்துள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi"

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316253&reg=3&lang=1

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2316286) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati