பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 78 கிலோ குராஷ் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பிங்கி பல்ஹாராவுக்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 28 SEP 2026 7:36PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 78 கிலோ குராஷ் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பிங்கி பல்ஹாராவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

போட்டி முழுவதும் அவர் மிகுந்த மன உறுதியுடனும், விடாமுயற்சியுடனும் செயல்பட்டதாகப் பிரதமர் குறிப்பிட்டார். வரும் காலங்களில் அவர் தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி, நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று திரு மோடி வாழ்த்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் 78 கிலோ குராஷ் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பிங்கி பல்ஹாராவுக்கு வாழ்த்துகள். அவர் போட்டி முழுவதும் அபாரமான மன உறுதியையும், விடாமுயற்சியையும் வெளிப்படுத்தினார். வரும் காலங்களில் அவர் தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி, நாட்டுக்கு மேலும் பல பெருமைகளைப் பெற்றுத் தர வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi"

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316168&reg=3&lang=1

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2316252) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Telugu , Malayalam