நித்தி ஆயோக்
தூய்மைப் பணிகளை நிறுவனமயமாக்கவும் நிலுவையில் உள்ள பணிகளைக் குறைக்கவும் நடவடிக்கைகள் : நித்தி ஆயோக்
இடுகை இடப்பட்ட நாள்:
28 SEP 2026 4:08PM by PIB Chennai
தேசப்பிதா மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தூய்மை இந்தியா இயக்கத்தை முழு மனதுடன் மேற்கொள்ள வேண்டுமென்ற தொலைநோக்கு பார்வைக்கேற்ப நிர்வாக சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை நிலுவையில் உள்ள விவகாரங்களை விரைந்து முடிப்பதற்கான சிறப்பு இயக்கத்தை தொடங்கியுள்ளது. கடந்த காலங்களில் பெற்ற இந்த வெற்றியைத் தொடர்ந்து நடப்பாண்டிலும் இதே நடைமுறையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் குறைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள், அமைச்சர்களுக்கு இடையேயான ஆலோசனைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மூலம் உரிய நேரத்தில் திறம்பட நிறைவேற்றும் வகையில் கடந்தாண்டிற்கான தூய்மை இயக்கம் நவம்பர் 2025 முதல் ஆகஸ்ட் 2026 வரை மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி நித்தி ஆயோக் 4105 பொதுமக்கள் குறைகள், 127 பிரதமர் அலுவலக குறிப்புகள், 34 பொதுமக்கள் குறைதீர்ப்பு முறையீடுகள், 5, நாடாளுமன்ற வாக்குறுதிகள் வெற்றிகரமாக முடித்துவைக்கபட்டன. இவைத்தவிர கோப்புகளை அகற்றுதல் அலுவலங்களில் பணியிடை வசதிகளை சீரமைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் 90 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டது. பயன்பாடற்ற பழையப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் மொத்தம் ரூ.1,96,905 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315977®=3&lang=1
***
TV/SV/PS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2316201)
வருகையாளர் எண்ணிக்கை : 13