பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்துவது தொடர்பான பயிலரங்கு : விஜயவாடாவில் நாளை தொடக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 28 SEP 2026 10:47AM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்த திறன் மேம்பாட்டு ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 2026 செப்டம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் பயிலரங்கு நடைபெறவுள்ளது. இதேபோல், அசாம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் நடைபெறவுள்ளது.

பயிற்சி மையங்களின் தரத்தை உயர்த்துவதற்காக, மாநில அரசுகள், பங்குதாரர்கள் ஆங்கியோரின் பங்களிப்பை உறுதிபடுத்துவதே இந்த பயிலரங்கின் நோக்கமாகும். பயிற்சி மையங்களில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, திறமைமிக்க பயிற்றுநர்களை தேர்வு செய்வது போன்றவை குறித்து இந்த பயிலரங்கில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 900 பயிற்சி மையங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315757&reg=3&lang=1

***

SS/LN/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2316180) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Telugu , Telugu_Vw , Kannada , Malayalam