பிரதமர் அலுவலகம்
லதா மங்கேஷ்கரின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 SEP 2026 9:27AM by PIB Chennai
தனது தெய்வீக இசைத் திறமையால் உலக அளவில் நாட்டிற்குப் பெருமை சேர்த்த லதா மங்கேஷ்கரின் பிறந்த தினத்தையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.
அவர் தனது வசீகரிக்கும் குரலால் நாட்டிற்கு பெருமை சேர்த்ததுடன், நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து முயற்சிகளுக்கும் தொடர்ந்து உத்வேகம் அளித்து வந்ததாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்திய இசை உலகிற்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில் இதனை பதிவிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2315719®=48&lang=2
***
TV/SV/PS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2315931)
வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam