விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராபி பருவ வேளாண் தயார்நிலை குறித்த இரண்டு நாள் தேசிய மாநாடு புதுதில்லியில் நாளை தொடங்குகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 27 SEP 2026 10:19AM by PIB Chennai

மத்திய அரசின் வேளாண்மை, விவசாயிகள் நல அமைச்சகம் 2026 செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில், புதுதில்லி பூசாவில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் அமைந்துள்ள பாரத ரத்னா சி சுப்பிரமணியம் அரங்கத்தில், இந்த ஆண்டு (2026) ராபி பருவத்துக்கான வேளாண் நடவடிக்கைகள் குறித்த தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் இந்த மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.

​இந்த ஆண்டு ராபி பருவத்திற்கான முக்கிய முன்னுரிமைகள், தயார்நிலை ஆகியவை குறித்து இதில் விவாதிக்கப்படும். இந்த மாநாட்டில் மாநில வேளாண் அமைச்சர்கள், மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுவின் (ஐசிஏஆர்) பிரதிநிதிகள், பங்கேற்கவுள்ளனர்.

​இந்த இரண்டு நாள் மாநாடு, மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதிலும், வேளாண் உற்பத்தி, உற்பத்தித் திறன், நிலைத்தன்மை, விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவது ஆகியவற்றிலும் கவனம் செலுத்தும். மேலும், அண்மையில் நடைபெற்ற வேளாண்மை தொடர்பான மண்டல மாநாடுகளின் முடிவுகளின் அடிப்படையிலும் விவாதங்கள் அமையும்.

​மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315470&reg=48&lang=1

****

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2315511) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada