ஆயுஷ்
11-வது ஆயுர்வேத தினக் கொண்டாட்டங்களில் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
25 SEP 2026 1:30PM by PIB Chennai
சர்வதேச அளவில் 38 நாடுகளில் நடைபெற்ற 11-வது ஆயுர்வேத தினக் கொண்டாட்டங்களில் 1.32 கோடி மக்கள் பங்கேற்றனர்.
ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு ஆயுர்வேதம் என்ற கருப்பொருளை கொண்டு இந்தியா உள்பட 38 நாடுகளில் 11-வது ஆயுர்வேத தினக் கொண்டாட்டம் 2026 செப்டம்பர் 23-ம் தேதி கொண்டாடப்பட்டது.
நாடு தழுவிய அளவில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டங்களில் மொத்தம் 13,10,690 பேர் பங்கேற்ற நிலையில், 1,32,47,311 பேர் அதிகாரப்பூர்வ ஆயுர்வேத தின டிஜிட்டல் தளத்தில் தங்களது ஆதரவைத் தெரிவித்திருந்தனர்.
மேலும், கொண்டாட்டங்களின் போது நடைபெற்ற நிகழ்வுகளையும், பொதுமக்களின் பங்கேற்பையும் ஆவணப்படுத்தும் வகையில் 90,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் ஆயுர்வேத தின டிஜிட்டல் தளத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.
மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மக்கள் அதிகளவில் பங்கேற்று, ஆயுர்வேதம் குறித்த விழிப்புணர்வையும் புரிதலையும் மேம்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுத்தனர்.
அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ஜப்பான், பின்லாந்து, ஆப்கானிஸ்தான், கானா, நியூசிலாந்து, ரஷ்யா, ஜார்ஜியா, அல்பேனியா உள்ளிட்ட 38 நாடுகளில் ஆயுர்வேத தினக் கொண்டாட்டங்கள் விமரிசையாக நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2314786®=3&lang=1
***
SS/AC/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2315061)
வருகையாளர் எண்ணிக்கை : 23