பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

துப்பாக்கிச் சுடுதலில் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 24 SEP 2026 7:11PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பரினாஸ் தலிவால், ஆனந்த்ஜீத் சிங் நருகா ஆகியோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்துத் தெரிவித்தார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இப்பிரிவில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இது என்று பிரதமர் குறிப்பிட்டார். வீரர்கள் இருவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த திரு மோடி, இந்த வெற்றி வருங்காலத்தில் அவர்கள் இன்னும் பல சாதனைகளைப் படைக்க ஊக்கமளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் ஸ்கீட் கலப்பு அணி பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பரினாஸ் தலிவால், ஆனந்த்ஜீத் சிங் நருகா ஆகியோருக்கு வாழ்த்துகள். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இப்பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை. இருவருக்கும் எனது நல்வாழ்த்துகள்! இந்த வெற்றி, வருங்காலத்தில் அவர்கள் இன்னும் பல சாதனைகளைப் படைக்க ஊக்கமளிக்கட்டும்."

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2314530&reg=3&lang=1

****

SS/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2314642) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Malayalam