குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
அடிப்படை மாண்புகள், கலாச்சாரம், பண்புகளைத் தக்க வைத்துக் கொண்டு மாற்றங்களை எதிர்கொள்ளும்போது, நாகரிகம் வளர்ச்சியடைகிறது: குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன்
இடுகை இடப்பட்ட நாள்:
24 SEP 2026 5:47PM by PIB Chennai
அடிப்படை மாண்புகள், கலாச்சாரம், பண்புகளைத் தக்க வைத்துக் கொண்டு மாற்றங்களை எதிர்கொள்ளும்போது, நாகரிகம் வளர்ச்சியடைகிறது என்று குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத்தலைவர் மாளிகையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சப்தாஹிக் விவேக் அமைப்பின் 'விஸ்வசஞ்சார் ஹிந்துத்வா கா' என்ற புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
1948-ல் தொடங்கப்பட்ட 'சப்தாஹிக் விவேக்' அமைப்பின் நீண்ட கால வரலாறு, மகாராஷ்டிரா மாநிலத்தின் சமூக, கலாச்சார, பொது வாழ்க்கையில் அதன் பங்களிப்பு குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
இந்தியாவின் கலாச்சாரம், தேசிய, சர்வதேச விவகாரங்கள், முக்கியத்துவம் வாய்ந்த சமூகப் பிரச்சனைகள் குறித்த புத்தகங்கள், ஆராய்ச்சி சார்ந்த இலக்கியங்களை வெளியிடும் அதன் பாரம்பரியத்திற்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
1925-ல் நாக்பூரில் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவாரால் நிறுவப்பட்ட ஆர்எஸ்எஸ் இயக்கம் தனது நூற்றாண்டு விழாவைக் நிறைவு செய்துள்ள நிலையில், இந்தப் புத்தகம் வெளியிடப்படுவது மிகவும் பொருத்தமான தருணம் என்று குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2314481®=3&lang=1
(Release ID: 2314481)
****
SS/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2314638)
வருகையாளர் எண்ணிக்கை : 8