சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

90 கோடி மக்களுக்கு தனித்துவ சுகாதார அடையாளங்கள்: ஐ.நா. கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறைச் செயலர் தகவல்

இடுகை இடப்பட்ட நாள்: 24 SEP 2026 12:36PM by PIB Chennai

நியூயார்க்கில் 81-வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அனைவருக்கும் சுகாதாரக் காப்பீடு-உலகளாவிய சுகாதாரத்துக்கான நட்பு நாடுகள் குழுவின் 7-வது ஆண்டு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது இதில், மத்திய சுகாதாரத்துறைச் செயலர் திருமதி புன்யா சலிலா ஸ்ரீவத்ஸவா பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர்,  தரமான  சுகாதாரச் சேவை அனைவருக்கும் எளிதாகக் குறைந்த செலவில் கிடைக்கக்கூடியதாக மாற்றுவதில் இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டைச் சுட்டிக்காட்டினார். அரிவாள் செல் நோயை (சிவப்பணுக்களைப் பாதிக்கும் மரபணு நோய்)
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒழிக்கும் என்பதை வலியுறுத்தினார்.

பரந்த அளவில் சுகாதாரச் சேவைகளை வழங்கும் வகையில் 1.8 லட்சத்துக்கும்  மேற்பட்ட ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களை இந்தியா உருவாக்கியிருப்பதாகத் தெரிவித்த அவர், இந்த மையங்களில் மகப்பேறு, குழந்தை நலம், தொற்றா நோய்களுக்கான பரிசோதனை, மனநலம், முதியோருக்கான சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசு நிதியுதவி பெறும் ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், அடித்தட்டு மக்களுக்கும் போதிய மருத்துவ சேவை கிடைக்காதவர்களுக்கும்   நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும் குறிப் பிட்டார்.

இது தவிர சேவைகளுக்கான அணுகலை எளிதாகப் பெறவும், நோயறிதல் சேவை, பிரதமரின் தேசிய டயாலிஸிஸ் திட்டம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் பட்டியலிட்டார்.

இந்தியாவில் வளர்ந்து வரும் டிஜிட்டல் சுகாதாரச் சூழலமைப்பை விளக்கிய அவர், 90 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்குத் தனித்துவ சுகாதார அடையாளங்கள் இருப்பதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2314294&reg=3&lang=1

 

***

SS/MM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2314519) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR