நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் நாடுகளின் வரித்துறை அமைப்புகளின் கூட்டத்தை மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2026 8:38PM by PIB Chennai

இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் ஒரு பகுதியாக, பிரிக்ஸ் நாடுகளின் வரித்துறை அமைப்புகளின் கூட்டத்தை மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார். இதில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சௌத்ரி, வருவாய்த் துறைச் செயலாளர் திரு அரவிந்த் ஸ்ரீவஸ்தவா ஆகியோரும் உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் பேசிய திருமதி நிர்மலா சீதாராமன், வரி நிர்வாகத்தை மேலும் துல்லியமாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதில் தரவு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் பங்கு, தனிப்பட்ட தலைமைத்துவங்களுக்கு அப்பாற்பட்ட ஒத்துழைப்பைத் தக்கவைக்கக்கூடிய நீடித்த நிறுவன வழிமுறைகள், நடைமுறைக் கருவிகளின் முக்கியத்துவம், மக்கள் மீது முதலீடு செய்வதன் மதிப்பு மற்றும் வரி நிர்வாகங்கள் முழுவதும் தொழில்முறை உறவுகளைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றை அவர் வலியுறுத்தினார். மேலும், ஐக்கிய நாடுகள் சர்வதேச வரி ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு மாநாடு சார்ந்த பேச்சுவார்த்தைகள் உட்பட, நடைபெற்று வரும் பலதரப்பு வரிப் பேச்சுவார்த்தைகளின் நேர்மையையும் நீடித்த தன்மையையும் உறுதி செய்வதற்கு பிரிக்ஸ் நாடுகளின் கண்ணோட்டங்கள் அவசியம் என்பதையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2314168&reg=3&lang=1  

***

TV/BR/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2314399) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Telugu , Malayalam