பாதுகாப்பு அமைச்சகம்
விமானப்படைக்கான தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் பிடிஎல் நிறுவனத்துடன் ₹811 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்து
இடுகை இடப்பட்ட நாள்:
23 SEP 2026 4:45PM by PIB Chennai
இந்திய விமானப்படைக்காக 160 செயற்கைக்கோள் ஸ்மார்ட் விமான எதிர்ப்பு ஆயுதங்கள், அதனுடன் தொடர்புடைய உபகரணங்களை
₹810.79 கோடி மொத்த செலவில் கொள்முதல் செய்வதற்காக, பாதுகாப்பு அமைச்சகம் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (பிடிஎல் - BDL) நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தியாவிலேயே வடிவமைத்து, உருவாக்கி, தயாரிக்கப்படுபவை என்ற பிரிவின் கீழ் இந்த ஒப்பந்தம், பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், புது தில்லியில் இன்று (செப்டம்பர் 23, 2026) கையெழுத்தானது.
செயற்கைக்கோள் ஸ்மார்ட் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் என்பது நீண்ட தூரத்திலிருந்தே எதிரி விமானத் தளங்களைச் செயலிழக்கச் செய்யும் திறனைக் கொண்டதாகும். இவற்றை 2028-2029-க்குள் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் சேர்க்கையானது, இந்திய விமானப்படையின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதோடு, நாட்டின் பாதுகாப்புத் தயார்நிலையையும் வலுப்படுத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313942®=3&lang=1
***
TV/PLM/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2314376)
வருகையாளர் எண்ணிக்கை : 9