பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் 8 ஆண்டுகள் நிறைவையொட்டி, அதன் சாதனைகள் குறித்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2026 11:35AM by PIB Chennai

ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு எட்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி  அதன் சாதனைகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று எடுத்துரைத்துள்ளார்.

ஒவ்வொரு இந்தியரும் தரமான, குறைந்த கட்டணத்துடன் கூடிய மருத்துவ வசதியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு இத்திட்டம் தொடங்கப்பட்டதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தற்போது, 60 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீட்டு வசதியைப் பெற்று வருவதாகவும், இது உலகில் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மருத்துவச் செலவுகளில் சாதனை அளவிற்கு  சேமிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஏழை, நடுத்தர வகுப்பினர் பயனடைந்துள்ளதாகவும் திரு மோடி தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் ஒவ்வொருவரின் இருப்பிடங்களுக்கு அருகே கொண்டு செல்லப்படுவது குறித்து குறிப்பிட்ட பிரதமர், ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களில் 500 கோடிக்கும் அதிகமான வருகைகள் இதுவரை பதிவாகியுள்ளதாகவும், இது அடிப்படை அளவில் ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். ஆயுஷ்மான் பாரத் பயனாளிகள் அனைவருக்கும் அவர் தமது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்திருப்பதாவது:

"ஒவ்வொரு இந்தியரும் தரமான, குறைந்த கட்டணத்துடன் கூடிய மருத்துவ வசதியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டது.

தற்போது, 60 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீட்டு வசதியைப் பெற்று வருகின்றனர். இது உலகில் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமாகும்.

இதன் மூலம் மருத்துவச் செலவுகளில் சேமிப்பு ஏற்பட்டு, ஏழை, நடுத்தர வகுப்பினர் பயனடைந்துள்ளனர்.

சுகாதாரச் சேவைகள் ஒவ்வொருவரின் இருப்பிடங்களையும் சென்றடைகிறது.

ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களில் 500 கோடிக்கும் அதிகமான வருகைகள் இதுவரை பதிவாகியுள்ளது. இது அடிப்படை அளவில் ஆரம்ப சுகாதாரச் சேவையை வலுப்படுத்துகிறது.

ஆயுஷ்மான் பாரத் பயனாளிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

ஆயுஷ்மான் பாரத்தின் 8 ஆண்டுகள்"

***

Release ID: 2313742

SS/IR/SM/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2313940) வருகையாளர் எண்ணிக்கை : 5