ஆயுஷ்
செப்டம்பர் 23 அன்று 11-வது ஆயுர்வேத தினம் கொண்டாடப்படவுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
22 SEP 2026 6:55PM by PIB Chennai
ஆயுஷ் அமைச்சகம், நாளை (செப்டெம்பர் 23, 2026) நாக்பூரில் "ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு ஆயுர்வேதம்" என்ற கருப்பொருளில் 11-வது ஆயுர்வேத தினக் கொண்டாட்டங்களை நடத்தவுள்ளது. இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள ஆயுர்வேத நிறுவனங்கள், மருத்துவர்கள், தொடர்புடைய தரப்பினர் இந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆயுஷ் அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், பல்வேறு ஆயுஷ் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நிறுவனங்களின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொள்வார்கள்.
ஆயுர்வேதத்தை வலுப்படுத்துவதிலும், சமூக நலனை மேம்படுத்துவதிலும் சான்றுகள், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை 11-வது ஆயுர்வேத தினக் கொண்டாட்டங்கள் முன்னிலைப்படுத்தும். நாக்பூரில் நடைபெறவுள்ள தேசிய நிகழ்ச்சியில், 'ஆயுஷ் சேவைகள் துறை' குறித்த முதலாவது அறிக்கை வெளியிடப்படவுள்ளது. வளர்ந்து வரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்புமுறை மூலம் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, ஆயுஷ் சேவைகள் துறையின் தற்போதைய நிலையை மதிப்பிடுகிறது.
இந்த நிகழ்ச்சியில், “பாரம்பரிய ஞானத்திலிருந்து உலகளாவிய தலைமைத்துவம் வரை: ஆயுஷ் தொலைநோக்குப் பார்வை 2030” அறிக்கை, இந்தியாவில் ஆயுஷ் தொடர்பான கண்டுபிடிப்புகள் குறித்த அறிக்கை, ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் – ஆயுர்வேத ஞானம் மற்றும் திறன் முன்முயற்சி இணையதளம் ஆகியவை அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2313605®=3&lang=1
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2313682)
வருகையாளர் எண்ணிக்கை : 5