குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

நீரை முறையாகப் பயன்படுத்தி, பாதுகாப்பது அவசியமாகும் – குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன்

இடுகை இடப்பட்ட நாள்: 22 SEP 2026 2:40PM by PIB Chennai

9-வது இந்திய சர்வதேச நீர் வார மாநாட்டை குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் புதுதில்லி பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கி வைத்தார். பருவநிலையை எதிர்கொள்ளக்கூடிய நீர் மேலாண்மை என்ற தலைப்பில் செப்டம்பர் 22 முதல் 26-ம் தேதி வரை 5 நாட்கள் மத்திய ஜல் சக்தி அமைச்சகம் இம்மாநாட்டை நடத்துகிறது.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், நீர் என்பது வாழ்விற்கும், நாகரீகங்களுக்கும் அடிப்படை என்று குறிப்பிட்டு அதை முறையாக பயன்படுத்துதல், பாதுகாத்தல், திறம்பட நிர்வகித்தல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் தமது சிறு வயது கால அனுபவங்களை நினைவு கூர்ந்த திரு சி பி ராதாகிருஷ்ணன், நீர் பற்றாக்குறையை தான் நேரில் கண்டதாகவும் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தையும் நினைவு கூர்வதாகத் தெரிவித்தார். மனித சமூகத்திற்கும், பூமிக்கும் நீரைச் சேமிப்பது மிக முக்கியம் என்று அவர் கூறினார்.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் 19,000 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரத யாத்திரை மேற்கொண்டதை குடியரசுத் துணைத்தலைவர் நினைவு கூர்ந்தார். ஆறுகளை இணைத்தல், நீர் பாதுகாப்பு, நீர் வளங்களை முறையாக நிர்வகித்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அந்த யாத்திரையின் நோக்கங்களில் ஒன்றாகும் என்று தெரிவித்தார். சில பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் சூழலில் மற்றப் பகுதிகள் வறட்சியை எதிர்கொள்ளும் நிலையைக் கையாள ஆறுகளை இணைப்பது உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆறுகளுடனான இந்தியாவின் நாகரீக தொடர்பு குறித்து எடுத்துரைத்த குடியரசு துணைத்தலைவர், இந்திய சமூகத்தினர் பல நூற்றாண்டுகளாக நீரைப் பாதுகாப்பதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும், நிர்வகிப்பதற்கும் சிறந்த மரபுகளையும், நடைமுறைகளையும் உருவாக்கியுள்ளனர் என்று தெரிவித்தார்.

உலகின் நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தையும், மக்கள் தொகையில் 18 சதவீதத்தையும் இந்தியா கொண்டிருந்தாலும் உலக அளவில் நன்னீர் வளங்களில் சுமார் 4 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளதாகக் குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார். அதிக நீர் வளமும், குறைந்த மக்கள் தொகையையும் கொண்ட நாடுகளின் நீர் பயன்பாட்டுத் தேவைகளுடன் இந்தியாவின் தேவைகளை ஒப்பிட முடியாது என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313399&reg=3&lang=1

***

SS/IR/PS/SM 


(வெளியீட்டு அடையாள எண்: 2313569) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Telugu , Kannada , Malayalam