விவசாயத்துறை அமைச்சகம்
புதிய விதைச் சட்டம் குறித்து நாடு தழுவிய விவசாய சங்கத் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் கலந்துரையாடினார்
இடுகை இடப்பட்ட நாள்:
10 SEP 2026 8:55PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், விவசாயிகளைப் பாதுகாக்க, புதிதாக விதைச் சட்டத்தை உருவாக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான், இன்று (10.09.2026) புது தில்லியில் உள்ள கிருஷி பவனில் நாடு முழுவதிலுமிருந்து வந்த விவசாய அமைப்புகளின் தலைவர்களுடன் இது குறித்து கலந்தாலோசனை நடத்தினார்.
சுமார் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதிகள் இந்தக் கலந்தாலோசனையில் பங்கேற்று, முன்மொழியப்பட்ட சட்டம் குறித்த தங்களது அனுபவங்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர். இக்கூட்டத்தின் போது சுமார் 20 விவசாய அமைப்புகள் தங்களது கருத்துக்களை பறிமாறிக் கொண்டனர். மத்திய வேளாண் துறைச் செயலாளர் திரு ஆதிஷ் சந்திரா, பிற உயரதிகாரிகளும் உடனிருந்தனர்.
கடந்த 60 ஆண்டுகளில் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களால், சந்தையில் போலியான, தரமற்ற விதைகள் ஊடுருவது, உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ள தற்போதுள்ள கட்டமைப்பு போதுமானதாக இல்லை என்று அமைச்சர் கூறினார். புதிய விதை, பூச்சிக்கொல்லிச் சட்டங்களின் தேவையை விவசாயிகள் கோரியதாக அவர் கூறினார். நவம்பர்-டிசம்பர் 2025-ல் வரைவு விதைச் சட்டம் குறித்த ஆலோசனைகளை அரசு கோரியிருந்தது எனவும், விவசாய அமைப்புகளிடமிருந்து சுமார் 18,000 ஆலோசனைகள் பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு, விவசாயிகள், விவசாய அமைப்புகள், பிற தரப்பினரின் ஆலோசனைகள் தொடர்ந்து பரிசீலிக்கப்படும் என்று திரு சிவராஜ் சிங் சௌகான் உறுதியளித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308922®=3&lang=1
***
SS/PLM/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2313356)
வருகையாளர் எண்ணிக்கை : 24