பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் தொலைபேசியில் பேச்சு
இந்தியா - ஐக்கிய அரபு அமீரக விரிவான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை
இடுகை இடப்பட்ட நாள்:
18 SEP 2026 4:32PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியை, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தொலைபேசியில் அழைத்துப் பேச்சு நடத்தினார்.
ஐக்கிய அரபு அமீரக அதிபர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் பிறந்தநாளுக்குத் தமது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான விரிவான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்தியாவின் வெற்றிகரமான பிரிக்ஸ் தலைமைத்துவத்திற்காக ஐக்கிய அரபு அமீரக அதிபர், பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார். பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் ஐக்கிய அரபு அமீரக பட்டத்து இளவரசர் திரு ஷேக் காலித்-தின் பங்கேற்பையும், இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் குறிப்பிடத்தக்க முடிவுகளை எடுப்பதில் ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய ஒத்துழைப்யையும் பிரதமர் பாராட்டினார்.
மேற்கு ஆசிய நிலைமை குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பிராந்திய அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
***
(Release ID : 2312059)
TV/PLM/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2313317)
வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam