விவசாயத்துறை அமைச்சகம்
மத்தியப் பிரதேசத்தில் கிடங்கு உரிமையாளர்களிடம் லஞ்சம் கேட்ட வேளாண் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்
இடுகை இடப்பட்ட நாள்:
21 SEP 2026 4:51PM by PIB Chennai
மத்தியப் பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் 2 கிடங்குகளின் உரிமையாளர்களிடம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரையடுத்து வேளாண் அமைச்சகத்தின் சந்தைப்பிரிவு அதிகாரி அனுராக் என்பவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யுமாறு மத்திய வேளாண், விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் உத்தரவிட்டுள்ளார்.
செஹோர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டபோது மானியத் தொகையை விடுவிக்க அந்த அதிகாரி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. பைரூண்ட தாலுகாவில் உள்ள ஷிவாய் கிடங்கு உரிமையாளரிடம் ரூ.1 லட்சமும், ரெஹ்தி பகுதியில் பெகரகேடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கிடங்கு உரிமையளரிடம் ரூ.60,000-ம் லஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்த புகார் மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இக்குற்றச்சாட்டுகளையடுத்து இவ்விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313045®=3&lang=1
***
TV/IR/PS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2313152)
வருகையாளர் எண்ணிக்கை : 8