சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் வன உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும்: மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் அறிவுறுத்தல்
இடுகை இடப்பட்ட நாள்:
21 SEP 2026 2:12PM by PIB Chennai
மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றங்கள் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் சர்வதேசப் பாதுகாப்பு மாநாட்டை ஜெய்பூரில் இன்று தொடங்கி வைத்தார். சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் திரு பூபேந்திர யாதவ், வனங்கள், வன உயிரினங்களைப் பாதுகாப்பது தொடர்பான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் வனப்பாதுகாப்பு பகுதிகள் 750-லிருந்து 1000 ஆக அதிகரித்துள்ளதாகவும், புலிகள், யானைகள் காப்பகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். பூர்வகுடிகள் மூலம் வன உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் வலியுறுத்தினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312928®=3&lang=1
***
SS/LN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2313145)
வருகையாளர் எண்ணிக்கை : 6