பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனில் வாலரிவனுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 20 SEP 2026 5:00PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற துப்பாக்கிச் சுடும் வீராங்கனை இளவேனில் வாலரிவனுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தியத் துப்பாக்கிச் சுடும் வீரர்கள் தொடர்ந்து தேசத்திற்குப் பெருமை சேர்த்து வருகின்றனர் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் தொடர்ந்து நமக்குப் பெருமை சேர்க்கிறார்கள்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு வாழ்த்துகள். இது அவர் இன்று வென்ற இரண்டாவது பதக்கம் என்பது இந்த வெற்றியை இன்னும் சிறப்பானதாக்குகிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திர மோடி"

***

(Release ID: 2312713)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2312738) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Gujarati , Kannada , Malayalam