ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தீன் தயாள் உபத்யாய - ஊரக திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 34,920 கிராமப்புற இளைஞர்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றனர்

இடுகை இடப்பட்ட நாள்: 19 SEP 2026 9:49AM by PIB Chennai

தீன் தயாள் உபத்யாய - ஊரக திறன் மேம்பாட்டுத் திட்டம் 2.0-ன் கீழ், இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டங்களை, அக்டோபர் 2026 முதல் பெரும்பாலான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்த மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் தயாராகி வருகிறது.

இதற்கான  ஆயத்தப் பணிகள் குறித்து, முதல் கட்டமாக 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் (ஒடிசா, மிசோரம், சிக்கிம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், புதுச்சேரி, கர்நாடகா, தெலங்கானா, பீகார்) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 31 டிசம்பர் 2027-க்குள் 3,57,112 கிராமப்புற இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட இலக்கின் ஒரு பகுதியாக, அக்டோபர் 2026-ல் 1,164 தொகுப்புகளில், 34,920 கிராமப்புற இளைஞர்கள் தங்கள் பயிற்சியைத் தொடங்கவுள்ளனர்.

இந்தத் திட்டத்துக்கான இணையதளத்தில், 24 மாநிலங்கள்,  யூனியன் பிரதேசங்களால், 1,200-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு, 5.6 லட்சம் இலக்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதர மாநிலங்கள், இலக்குகளை நிர்ணயிப்பதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளன. ஒவ்வொரு கட்டமாக  நடைபெறும் இத்தகைய ஆய்வுக் கூட்டங்கள், பயிற்சித் தொகுப்புகளைத் தொடங்கும் செயல்முறைகளை விரைவுபடுத்தும்.

இந்தத் திட்டம், ஏழை கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வழங்கும் மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயிற்சிக்கான கால அளவு 3 முதல் 12 மாதங்கள் வரை மாறுபடும்.

மேலும், இத்திட்டத்தைச் செயல்படுத்தும் முகமைகளுக்கு, இலக்குகளை ஒதுக்கீடு செய்யும் பணிகளை  விரைவுபடுத்தவும், திட்டமிடப்பட்ட காலத்திற்குள்  பயிற்சித் தொகுப்புகளைத் தொடங்கவும், சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312317&reg=3&lang=1    

***

SS/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2312490) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu , Kannada