ரெயில்வே அமைச்சகம்
முகுத்பன் – கட்சந்தூர் இடையே புதிய ரயில் பாதை அமைக்க இந்திய ரயில்வே ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
18 SEP 2026 11:23AM by PIB Chennai
அடிலாபாத் – கட்சந்தூர் இடையே ரூ.493 கோடி செலவில் புதிய ரயில் பாதை அமைக்க இந்திய ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது.
பிராந்திய ரயில் இணைப்பை வலுப்படுத்தவும், பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை எளிமைப்படுத்தும் நடவடிக்கையாகவும், தெற்கு மத்திய ரயில்வேயில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள முகுத்பன் - கட்சந்தூர் இடையே 38.21 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.493 கோடி செலவில் புதிய ரயில் பாதை அமைக்க இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
முகுத்பன் மற்றும் கட்சந்தூர் பகுதிகளுக்கு நடுவே கோல் இந்தியா நிறுவனத்தின் வெர்ஸ்டன் கோல்ஃபீல்ட்ஸ் சுரங்கம் மற்றும் சிமெண்ட் ஆலைகள், முக்கியத் தொழிற்சாலைகள், சுண்ணாம்பு சுரங்கங்கள் இருப்பதால் புதிய ரயில் பாதை தொழில் மையங்களுக்குத் தேவையான ரயில் இணைப்பை வலுப்படுத்துவதோடு சரக்குப் போக்குவரத்தையும் எளிமையாக்கும் எனக் கருதப்படுகிறது.
மேலும், புதிய ரயில் திட்டம், பல்ஹர்ஷா – நாக்பூர் இடையிலான போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், யவத்மல் – சந்திரபூர் மாவட்டங்கள் இடையே ரயில் போக்குவரத்தை மேம்படுத்தி அப்பகுதியின் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311827®=3&lang=1
***
SS/AC/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2312236)
வருகையாளர் எண்ணிக்கை : 14