குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் 30 லட்சம் கைவினைஞர்கள் பதிவு

இடுகை இடப்பட்ட நாள்: 18 SEP 2026 1:00AM by PIB Chennai

நரேந்திர மோடி தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைவதைமத்திய குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் கொல்கத்தாவில் கொண்டாடியது.  இந்த நிகழ்ச்சியில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரி,   விஸ்வர்கமா திட்டத்தின் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை இருப்பதாகப் பாராட்டினார். மத்திய குறு,சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு ஜித்தன் ராம் மஞ்சி பேசும்போது,திறன் பயிற்சி பெற்றுநவீன கருவிகளைப் பயன்படுத்தி கைவினைஞர்கள் அதிகாரம் பெறுவதற்குவிஸ்வகர்மா திட்டத்தை ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பிரதமரின் விஸ்வ கர்மா திட்டத்தில் 30 லட்சம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள். இதில் 24.50லட்சம் பேர் அடிப்படை திறன் பயிற்சியை பெற்றிருக்கிறார்கள். 18.15 லட்சம் கைவினைஞர்களுக்கு நவீன கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. 6.18 லட்சம் பேருக்கு சதவிகித சலுகை வட்டியில் தலா ரு.லட்சம் கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311768&reg=3&lang=1

 

***

TV/MM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2312229) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Gujarati , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Kannada