மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் படிப்பு: மத்திய கல்வி அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 SEP 2026 1:47PM by PIB Chennai

ஆரம்பப் பள்ளி ஆசிரியரகளுக்கு 6 மாத சான்றிதழ் படிப்பை (பிரிட்ஜ்) மத்திய கல்வி அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தொடங்கி வைத்தார். தரமான கல்வியை மேம்படுத்த, இளநிலை கல்வியில் (பி.எட்) முடித்து பணியில் இருக்கும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த சான்றிதழ் படிப்பு பொருந்தும்.  ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திறனையும் போட்டித்தன்மையையும் வளர்த்தெடுப்பதற்கு, ஆசிரியர்களுக்கு இந்த சான்றிதழ் படிப்பு உதவியாக இருக்கும். கற்பிப்பதற்கான சிறப்புத் தகுதியைப் பெற ஆசிரியர்களுக்கு இந்தப் படிப்பு வழிவகுக்கும். தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனம் முலம் இந்த பிரிட்ஜ் பாடத்திட்டம் செயல்படுத்தப்படும். குழந்தைகளின் வளர்ச்சிக்கேற்ற கற்பித்தல் நடைமுறைகளை ஆசிரியர்களுக்கு வழங்கி ஆரம்ப நிலையில் கல்வியின் தரத்தை உயர்த்த இந்த சான்றிதழ் படிப்பு உதவும்.தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலால் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடத்திட்டம் ஆரம்ப நிலை கற்பித்தல் திறன்களை வலுப்படுத்தும். இளம் குழந்தைகளின் பல்வேறு கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தப் பாடத்திட்டம் ஆசிரியர்களுக்கு உதவும். 2018-ம் ஆண்டு ஜூன் 28 முதல் 2023 ஆகஸ்ட் 11 வரை ஆரம்பப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்காகவே இந்த பிரிட்ஜ் பாடத்திட்டம் வடிவைமக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311284&reg=3&lang=1

***

TV/MM/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2312194) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Telugu , Kannada