தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
2030-ம் ஆண்டிற்குள் படைப்பாற்றல் துறையில் 20 லட்சம் திறன்வாய்ந்த பணியாளர்கள் தேவைப்படுவார்கள்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்
பள்ளி, கல்லூரிகளில் படைப்பாற்றலுக்கான ஆய்வங்களை ஏற்படுத்தி இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்க அரசு நிதியுதவி: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்
இடுகை இடப்பட்ட நாள்:
18 SEP 2026 2:39PM by PIB Chennai
படைப்பாற்றல் பொருளாதாரம் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார்.

ஒ பி ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சட்டம், கொள்கை, படைப்பாற்றல் பொருளாதாரம் என்ற தலைப்பிலான மாநாட்டில் கலந்துகொண்டு தொடக்க உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.
திரைப்படம், இசை, ஆன்லைன் விளையாட்டுகள், அனிமேஷன், வடிவமைப்பு, விளம்பரம், டிஜிட்டல் உள்ளடக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் வேலைவாய்ப்பு, தொழில் முனைவோருக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் பங்கேற்று இளைஞர்களிடையே உரையாற்றிய அவர், புதிய யோசனைகள், கற்பனைத்திறன், கலாச்சாரம், புதுமைக்கண்டுபிடிப்புகள், அறிவுசார் சொத்துரிமை ஆகியவற்றால் உத்வேகம் பெற்று வரும் இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சிக் குறித்து எடுத்துரைத்தார்.
படைப்பாற்றல் பொருளாதாரம் உலக அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.1 சதவீதமும் வேலைவாய்ப்பில் 6.2 சதவீதமும் பங்களிப்பை அளிக்கிறதாக அவர் தெரிவித்தார். கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றல் சார்ந்த தொழில்களின் 5 கோடியே 70 லட்சம் பேர் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். நாட்டின் ஊடகம், பொழுதுபோக்குச் சார்ந்த பொருளாதார மதிப்பு 2.5 டிரில்லியனாக உள்ளது என்று அவர் கூறினார்.
படைப்பாற்றல் துறையில் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்த அவர் 2030-ம் ஆண்டிற்குள் படைப்பாற்றல் துறையில் 20 லட்சம் திறன்வாய்ந்த பணியாளர்கள் தேவைப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.
இந்தியப் படைப்பாற்றல் தொழில்நுட்ப நிறுவனம், 15 ஆயிரம் பள்ளிகள், 5 கல்லூரிகளில் படைப்பாற்றலுக்கான ஆய்வகம் அமைப்பதற்கு அரசு உதவிடும் என்று அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பதிப்புரிமை பாதுகாப்பு, படைப்பாளிகளுக்கான நியாயமான இழப்பீடு, செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான பயன்பாடு ஆகியவற்றுக்காக சட்டம் மற்றும் கொள்கைக் கட்டமைப்புகள் மூலம் படைப்பாற்றல் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்பட வேண்டும் என்றும் டாக்டர் எல் முருகன் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311955®=3&lang=1
***
SS/SV/PS/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2312142)
வருகையாளர் எண்ணிக்கை : 14