சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எச், எச்1, எக்ஸ் வகை மருந்துகள் மீதான ஒழுங்குமுறை மேற்பார்வையை வலுப்படுத்தும் வகையில் மருந்து விதிமுறைகள், 1945-ல் திருத்தம் செய்ய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 17 SEP 2026 9:37AM by PIB Chennai

எச், எச்1, எக்ஸ் வகை மருந்துகள் மீதான ஒழுங்குமுறை மேற்பார்வையை வலுப்படுத்தும் வகையில் மருந்து விதிமுறைகள், 1945-ல் திருத்தம் செய்ய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதற்காக 2026 செப்டம்பர் 8 அன்று வரைவு அரசிதழ் மூலம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட திருத்தத்தின்படி எச், எச்1, எக்ஸ் வகை மருந்துகளை அங்கீகரிக்கப்படாத முறையில் பெறுவது, விற்பனைச் செய்வது தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்கிறது. கூடுதல் ஒழுங்குமுறைப் பாதுகாப்பு நடைமுறையாக மருந்து கடைகளில் சிசிடிவி கட்டாயக் கண்காணிப்பைப் பரிந்துரைத்துள்ளது.

இப்பரிந்துரை தொடக்கத்தில் மருந்து ஆலோசனைக் குழுவால் விவாதிக்கப்பட்டது. பின்னர், மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினர்களிடையே பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

பரிந்துரைக்கப்பட்ட திருத்தத்தின்படி எச், எச்1, எக்ஸ் வகை மருந்துகளின் விற்பனை, விநியோகம் ஆகியவற்றைக் கண்காணிப்பதை வலுப்படுத்தவும், உரிய மருந்து சீட்டுகள் இன்றி அவற்றைப் பெறுவதையும், விற்பனைச் செய்வதையும் கட்டுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரிந்துரைக்கப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு முறையானது மருந்து விநியோகத்தில் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புடைமையையும் மேம்படுத்துவதோடு பொது சுகாதாரத்திற்கான பாதுகாப்பையும் வலுப்படுத்தும்.

இந்தப் பரிந்துரைக்கப்பட்ட திருத்தம் குறித்த கருத்துகளை அமைச்சகம் வரவேற்கிறது. drugsdiv-mohfw[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311184&reg=3&lang=1

***

TV/IR/GS/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2312062) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Malayalam