உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிஷாவ் பல்நோக்குத் திட்ட ஒப்பந்தம்: 6 மாநில முதலமைச்சர்கள் கையெழுத்து

இடுகை இடப்பட்ட நாள்: 15 SEP 2026 5:26PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு  அமித் ஷா, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் ஆகியோர் முன்னிலையில், உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு சுகவிந்தர் சிங் சுகு, ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா, தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி ஆகியோர் இன்று கிஷாவ் பல்நோக்குத் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வில் மத்திய உள்துறைச் செயலாளர், நீர்வளம், நதி மேம்பாடுகங்கை புத்துயிரூட்டல் துறையின் செயலாளர், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாகக்   கூறினார்.

இத்திட்டம் நிறைவடைந்ததும், இந்நிகழ்வு வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயமாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், தில்லி ஆகிய மாநிலங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயனளிக்கும் என்று அவர் கூறினார்.

ஆறு மாநிலங்களும் ஒப்புதல் அளித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மிக முக்கியமான அம்சம் என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார். இத்திட்டத்தை இந்த நிலைக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய ஆறு மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் திரு சி ஆர். பாட்டீல் ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சர் வாழ்த்துத் தெரிவித்தார்.

மத்திய அரசும், யமுனைப் படுகையைச் சேர்ந்த இந்த ஆறு மாநிலங்களின் முதலமைச்சர்களும் இத்திட்டத்தை விரைவாக நிறைவு செய்வதில் உறுதியுடன் உள்ளனர் என்று திரு அமித் ஷா கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கேகாணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310528&reg=3&lang=1   

***

TV/SV/SM  


(வெளியீட்டு அடையாள எண்: 2311821) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Gujarati