வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2030-க்குள் 100 பில்லியன் டாலர் இருதரப்பு வர்த்தகத்தை எட்டும் வகையில், இந்திய-ரஷ்ய பொருளாதாரக் கூட்டாண்மையை வலுப்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
இடுகை இடப்பட்ட நாள்:
10 SEP 2026 7:10PM by PIB Chennai
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இன்று, இந்திய-ரஷ்ய பொருளாதார மற்றும் தொழில்துறை கூட்டாண்மையை வலுப்படுத்த அழைப்பு விடுத்தார். மேலும், 2030-க்குள் 100 பில்லியன் டாலர் இருதரப்பு வர்த்தகம் மற்றும் 50 பில்லியன் டாலர் இருவழி முதலீடு என்ற இலக்கை அடைய இரு நாடுகளின் வணிக நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். புதுதில்லியில் நடைபெற்ற இன்னோப்ரோம் இந்தியா 2026 ரஷ்ய தொழில்துறைக் கண்காட்சியில் ரஷ்ய தொழில்துறை மற்றும் வர்த்தக அமைச்சர் திரு ஆன்டன் அலிகானோவ் உடன் இணைந்து உரையாற்றிய திரு கோயல், இரு நாட்டுத் தலைவர்களும் நிர்ணயித்த இலக்குகள், இரு அரசுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் செயல்திறனுக்கான ஒரு அளவுகோலாக அமையும் என்று கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி சாராத வர்த்தகம் அதன் முழுமையான திறனை விட மிகக் குறைவாகவே உள்ளதாகவும், இருதரப்பு வர்த்தகத்தை 60 பில்லியன் டாலரிலிருந்து 100 பில்லியன் டாலராக உயர்த்துவதற்கு இந்த இடைவெளியை நிரப்புவது அவசியம் என்றும் அமைச்சர் கூறினார். மருந்துகள், பொறியியல் பொருட்கள், ரசாயனங்கள், ஜவுளி, உணவுப் பொருட்கள், கடல்சார் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள் ஆகியவற்றை இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்வதன் மூலம் இருதரப்பு வர்த்தகத்தில் சமநிலையை ஏற்படுத்துவதே இந்த இலக்கை அடைவதில் முக்கியமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308862®=3&lang=1
***
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2310836)
வருகையாளர் எண்ணிக்கை : 33