நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் இளைஞர் நாடாளுமன்றப் போட்டி - வெற்றியாளர்களுக்கு மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு பரிசுகளை வழங்கினார்

இடுகை இடப்பட்ட நாள்: 10 SEP 2026 8:27PM by PIB Chennai

ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 27-வது தேசிய இளைஞர் நாடாளுமன்றப் போட்டி, 2025-26- ன் பரிசளிப்பு விழா, இன்று, (செப்டம்பர் 10, 2026), நாடாளுமன்ற வளாகத்திலுள்ள நூலகக் கட்டடத்தில் அமைந்துள்ள ஜிஎம்சி பாலயோகி கலையரங்கில் நடைபெற்றது .

மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து, போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி பெற்ற அணிகளுக்குக் கேடயங்களையும் பரிசுகளையும் வழங்கினார். தேசிய வெற்றியாளரான மணிப்பூர், ஜே.என்.வி உக்ருல்-1 அணிக்கும் மற்ற ஏழு மண்டல வெற்றியாளர்களுக்கும் அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

ஜனநாயகத்தின் சின்னமாக விளங்கும் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் மாணவர்களுக்கு வழிகாட்டினார். மேலும், மக்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் தங்களைத் தாங்களே ஆளும் நாடாளுமன்ற ஜனநாயக முறை, இந்தியாவிற்கு மிகவும் பொருத்தமானது என்றும் அவர் கூறினார். நாடாளுமன்ற ஜனநாயக வடிவமே உலகின் மிகச்சிறந்த ஆட்சி முறை என அவர் விவரித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308902&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2310816) வருகையாளர் எண்ணிக்கை : 28
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Telugu , Telugu