குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அமைதி, முன்னேற்றம், செழுமை ஆகியவற்றுக்கான வலுவான குரலாக இந்தியா உருவெடுத்துள்ளது – குடியரசு துணைத்தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 15 SEP 2026 2:34PM by PIB Chennai

தேசிய முக்கியத்துவமிக்க நிறுவனமாக ஐசிடபிள்யூஏ அங்கீகரிக்கப்பட்டதன் 25-ம் ஆண்டு நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவரும், இந்திய உலக விவகாரங்கள் குழுமத்(ஐசிடபிள்யூஏ) தலைவருமான திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று உரையாற்றினார். புதுதில்லி சப்ரு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இக்குழுமத்தின் சிறப்புமிக்க பாரம்பரியத்திற்கு பங்களித்தல், நிறுவனர்கள், முன்னாள் தலைவர்கள், தலைமை இயக்குநர்கள், அறிஞர்கள், தூதரக அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், பணியாளர்கள் ஆகியோர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக வெளியுறவு அமைச்சரும் ஐசிடபிள்யூஏ துணைத் தலைவருமான டாக்டர் எஸ் ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை செயலாளர் திரு விக்ரம் மிஸ்ரி, வெளியுறவு அமைச்சக குழுவினர் அனைவருக்கும் குடியரசுத் துணைத்தலைவர் வாழ்த்து தெரிவித்தார். மோதல்கள், முரண்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள உலகில் புதுதில்லி தலைவர் பிரகடனம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிறந்த சாதனை என்று குறிப்பிட்டார்.

நாடுகளுக்கிடையே நல்லுறவை கட்டமைப்பதை தூதரக உறவின் முதன்மை நோக்கம் என்று தெரிவித்தார். மனித சமுதாய முன்னேற்றமும், உலக அமைதியும் இணைந்து செயல்பட வேண்டுமென்றும், நாடுகள்  புரிந்து கொண்டு பரஸ்பரம், நன்மை கருதி செயல்படும்போது மட்டுமே இது சாத்தியம் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், உலக அரங்கில் இந்தியாவின் பங்களிப்பை சுட்டிக்காட்டிய குடியரசு துணைத்தலைவர், அமைதி, முன்னேற்றம், செழுமை ஆகியவற்றுக்கான ஒரு வலுவான குரலாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று கூறினார். உலகம் ஒரு குடும்பம் என்ற தத்துவத்தை  முன்னிலைப்படுத்திய அவர், கொவிட் நெருக்கடியின் போது  மேற்கொள்ளப்பட்ட மைத்ரி தடுப்பூசித் திட்டம், பேரிடர் மீட்பு முயற்சிகள், லைஃப் இயக்கம், சர்வதேச சூரியக் கூட்டமைப்பு, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டமைப்பு ஆகிய உலாகளாவிய முன்முயற்சிகள் ஆகியவற்றை இந்த தத்துவ செயல்பாட்டிற்கான உதாரணமாகக் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310401&reg=3&lang=1

***

TV/IR/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2310638) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , Bengali-TR , English , Urdu , हिन्दी , Gujarati , Telugu , Malayalam