பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிர்வாக சீர்திருத்தங்கள் துறைக்கு அலுவல் மொழி சிறப்பு விருது

இடுகை இடப்பட்ட நாள்: 14 SEP 2026 5:14PM by PIB Chennai

மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள், பொது மக்கள் குறை தீர்ப்புத் துறைக்கு, அலுவல் மொழியைச் செயல்படுத்துவதில் ஆற்றிய சிறந்த பணி, தொடர்ச்சியான சிறப்பான செயல்பாட்டிற்காக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழித் துறையால் 202526-ம் ஆண்டிற்கான 'ராஜ்பாஷா உத்கிருஷ்ட சம்மான்' எனப்படும் அலுவல் மொழி சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

இன்று (2026 செப்டம்பர் 14) இந்தி தினத்தை முன்னிட்டு, மகாராஷ்டிராவின் நவி மும்பையில் நடைபெற்ற 6-வது அகில இந்திய அலுவல் மொழி மாநாட்டின் போது, ​ மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, நிர்வாக சீர்திருத்தங்கள் துறை செயலாளர் திருமதி நிவேதிதா சுக்லா வர்மாவுக்கு இந்த விருதை வழங்கினார்.

202324, 202425 ஆகிய இரண்டு  ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக, அலுவல் மொழித் துறையால் இத்துறைக்கு ராஜ்பாஷா கீர்த்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டும், செயல்படுத்துவதில் தனது சிறப்பான செயல்பாட்டிற்காக முதலிடத்தைப் பிடித்தது. விதிகளின்படி, ஒரு அமைச்சகம்/துறை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் முதல் பரிசைப் பெற்றால், அடுத்த ஆண்டில் அதற்குப் புரஸ்கார் விருது வழங்கப்படாது.

 

இருப்பினும், நிர்வாக சீர்திருத்தங்கள் துறை பல ஆண்டுகளாக அலுவல் மொழித் துறையில் தொடர்ச்சியாக மிகச்சிறந்த பணியை ஆற்றி வருகிறது. எனவே, அலுவல் மொழியைச் செயல்படுத்துவதில் அதன் தொடர்ச்சியான சிறப்பை அங்கீகரிக்கும் வகையில், அத்துறைக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310107&reg=48&lang=2

***

TV/PLM/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2310518) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Telugu