வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின்னணு மூலச் சான்றிதழ்களை எளிதாக்குவதற்கான முதல் கூடுதல் நெறிமுறையில் இந்தியாவும் மெர்கோசுர் நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 14 SEP 2026 4:31PM by PIB Chennai

மெர்கோசுர் (MERCOSUR) என்பது அர்ஜென்டினா, பிரேசில், பராகுவே உருகுவே ஆகிய நாடுகளின் வணிக கூட்டமைப்பாகும்.

 

மின்னணு மூலச் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்வதை எளிதாக்கும் வகையில், இந்தியாவும் மெர்கோசுரும் இந்தியா–மெர்கோசுர் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கூடுதல் நெறிமுறையில் கையெழுத்திட்டுள்ளன. இது, இந்தியாவுக்கும் மெர்கோசுர் நாடுகளுக்கும் இடையே காகிதமில்லா வர்த்தகத்தை எளிதாக்குவதற்கும், சுங்க நடைமுறைகளை நவீனமயமாக்குவதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.

 

மெர்கோசுரின் தற்காலிகத் தலைமைத்துவத்தின் அடிப்படையில், உருகுவே வெளியுறவு அமைச்சர் திரு மரியோ லுபெட்கின் தலைமையிலும், அர்ஜென்டினா, பிரேசில் தூதரகங்களின் பிரதிநிதிகள் முன்னிலையிலும் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய வர்த்தகத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், இந்தியாவிற்கான உருகுவே தூதர் திரு ஆல்பர்டோ குவானி, இந்தியாவிற்கான பராகுவே தூதர் திரு ஃபிளெமிங் ரவுல் டுவார்டே ராமோஸ் ஆகியோர் இந்த நெறிமுறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

 

இந்தியா-மெர்கோசுர் முன்னுரிமை கட்டண ஒப்பந்தம் 25 ஜனவரி 2004 அன்று கையொப்பமிடப்பட்டு, 1 ஜூன் 2009 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தம், இந்தியத் தரப்பால் 450 கட்டண வகைகளிலும், மெர்கோசுர் தரப்பால் 452 கட்டண வகைகளிலும் முன்னுரிமை கட்டணச் சலுகைகளை வழங்குகிறது.

 

தற்போதைய முதல் கூடுதல் ஒப்பந்த நெறிமுறையானது, மின்னணு வடிவத்தில் வழங்கப்படும் மூலச் சான்றிதழ்கள், காகித வடிவத்தில் வழங்கப்படும் மூலச் சான்றிதழ்களுக்கு இணையான சட்டப்பூர்வ செல்லுபடியையும் மதிப்பையும் கொண்டிருக்கும். இத்தகைய மின்னணு மூலச் சான்றிதழ்கள், முறையாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், அதிகாரிகளால், சம்பந்தப்பட்ட தரப்பினரின் உள்நாட்டுச் சட்டங்களுக்கு இணங்க வழங்கப்பட்டு, மின்னணு முறையில் கையொப்பமிடப்பட வேண்டும்.

 

இந்த நடவடிக்கை, டிஜிட்டல் வடிவில் காகிதமில்லா வர்த்தக ஆவணங்களை நோக்கிய மாற்றத்தை எளிதாக்குவதோடு இந்தியா-மெர்கோசுர் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தின் செயல்திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310083&reg=48&lang=1

(Release ID: 2310083)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2310239) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Telugu , Malayalam