உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

52-வது இந்திய ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் விருது வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 13 SEP 2026 7:46PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, மும்பையில் நடைபெற்ற 52-வது இந்திய ரத்தினம் மற்றும் ஆபரண விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னவிஸ், துணை முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே, குஜராத் துணை முதலமைச்சர் திரு ஹர்ஷ் சங்கவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, விலைமதிப்பற்ற கற்களும், ஆபரணங்களும் எப்போதும் இந்திய அடையாளத்தின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கின்றன என்று கூறினார். சூரத் நகர வைர வியாபாரிகள் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து, அவர்களைச் சுயசார்பு கொண்டவர்களாக மாற்றியதுடன், நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஹாங்காங் மற்றும் ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கு நகைகளை  ஏற்றுமதி செய்வதில் இந்தியா இன்று ஒரு முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது என்றும், இந்தப் பயணத்தை நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் திரு அமித் ஷா கூறினார்.  ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, ஓமன், இங்கிலாந்துடன் மத்திய வர்த்தக அமைச்சகம் மேற்கொண்டுள்ள தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள், நமது வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான ஒரு முக்கிய வழியாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்திய அரசின் ஆதரவுடன், புதிய சந்தைகள், புதிய வர்த்தக வழிகள், புதிய வாய்ப்புகளைக் கண்டறிய நாம் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் முன்னேற வேண்டும் என்று அவர் கூறினார். இன்று, உலகில் வெட்டப்பட்டு மெருகூட்டப்படும் வைரங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவில் பதப்படுத்தப்படுகின்றன; இது இந்திய நகைத்துறையின் ஆற்றலுக்கும், தொழில்முனைவுத் திறனுக்கும்  மிகச்சிறந்த சான்றாகும் என்றும் திரு அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309852&reg=3&lang=1

***

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2310035) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati